ஆதவன் மறைந்தான்
முத்தமிழ்க் காவலனே
செம்மொழியின் நாயகனே
தமிழ்த் தாயின் தலைமகனே
சுறுசுறுப்பின் முதல் மகனே
அஞ்சுகத் தாய் பெற்ற அருள் மகனே
விஞ்சும் தமிழால் வெற்றிகள் பல கண்டவனே
திட்டங்கள் பல தந்தவனே
தமிழ் நாட்டை ஐந்து கட்டங்கள் ஆண்டவனே
ஒப்பற்ற தலைவனே மக்கள் கலைஞனே
நீ மாண்டு சென்றாலும்
உன் தமிழ் இம் மண்ணை விட்டு மாழாது
தமிழ் மொழியின் அரிச்சுவடி உள்ள வரை
நீ நாவுகளில் உச்சரிக்கப்படுவாய்
உன் ஆத்மா சாந்தியடையட்டும் .....
அஷ்ரப் அலி