சரித்திரம் செய்யடா

தட்டி கொடுத்து தடம் பதிக்க உதவா உறவுகள்
நீ தட்டிவிழ மட்டம் தட்டி மனம் மகிழுமடா

வெற்றி கொடி நாட்ட வேர்வை சிந்தி நீ உழைத்தாலும்
உலகம் வேசித்தனம் என கூசாமல் பேசி உனை கொல்லுமடா....

வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து விடலாம் அன்பாய் என நீயிருக்க....
உறவு எனும் உனை எரிக்கும் விறகுகள் பகைமையை புகையுமடா....

உன் முயற்சிகளையும் பயிற்சிகளையும் சில ஏளன கண்கள் ஏறெடுக்குமடா....
உனக்கெல்லாம் இது எதற்கென போர் தொடுக்குமடா....

இப்போதனை புரிந்து பல சோதனை கடந்து சில வேதனை சுமந்து சாதனை கொள்ளடா.....
மனிதா புது சரித்திரம் செய்யடா......

- அருண் குமார்

எழுதியவர் : அருண் குமார் (8-Aug-18, 1:10 pm)
பார்வை : 1556

சிறந்த கவிதைகள்

மேலே