கறுப்புத் திரை
காசினியில் ஜனனித்திடும்
ஐந்தறிவு ஜீவன்களும்
தடைகளேதுமின்றி கலந்துறவாட
தாய்மடியில் பிறந்திட்ட
எனதுரிமை எங்கே???
வாழ்வின் ரணமதை
அகமதிலே சுமந்து
நான்கு சுவருள் முடிகிறது
அர்த்தமற்ற என் வாழ்வு!
அரசியல் யாப்பின் உரிமைகள் யாவும்
கானல் நீராய் தோன்றி மறைய
மீண்டும் ஒரு வசந்தம்
என் வாழ்வில் எப்போது??
இறைவா!!
கறுப்புத் திரையினுள்ளே
சிறகிழந்த பட்சி நான்!!!