தென்றல்
அவள்
வனம் பிரசவித்த முதல் குழந்தை
தன் ஸ்பரிசமென்னும்
மழலை மொழிகொண்டு
இதயம் வருடி இமை மூடச்செய்பவள்
கவிஞனின் கைக்குழந்தை..!
விளைப்பயரின்
முதல் சுவாசக்காற்று...!
மரங்கள் தங்களுக்குள்
பரிமாறிக்கொள்ளும் பரிபாஷை..!
இயற்கை நமக்களித்த
மாபெரும் நன்கொடை..!
அவள்
தென்றல்..!
- மகா