உளிபட்டவுடன் உடையாமல் ....


பேருந்துப் பயணத்தில்
என்னருகே ஓர் பெண் .

சற்றே கிராமிய மணத்துடன்
நேர்த்தியான தோற்றம்
படிய வாரிய தலை ,
நெற்றியில் கீற்றாய்
சந்தனம்,குங்குமம் .

கள்ளமில்லா இளம்பிராயம் ,
தள்ளிச் சென்ற கணவன் ,
பள்ளிசெல்லா ,படிதாண்டா
அனுபவத்தால் தடுமாற்றம் ,
எள்ளி நகையாடிய சொந்தம்
பற்றியும்

பின்னர்
மெல்ல எழுந்ததை ,
பெற்றவன் துணை கொண்டு
தொழில் சில கற்றதை
வேரூன்றி நின்றதை ,
தற்போது விருட்சமாய் நின்று ,
மற்றோருக்கு இயன்றதைச் செய்வதை ,
புன்னகை மாறாமல் சொல்லிவிட்டு
இறங்கிச் சென்று விட்டாள்....

உளிபட்டவுடன் உடையாமல்,
உருவம் பெற்ற பளிங்குச் சிலைகள் ,
நம்மிடையே நடமாடிக்கொண்டிருப்பதை ,
உணர்த்திச் சென்றாள்!!!!!!!!!!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (18-Aug-11, 11:48 am)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 287

மேலே