ஏழ்மை என்னும் ஏழாவது சுரம்


சுதந்திர கீதத்தில்
ஒரு சுரம் மட்டும்
இன்னும்
இசையுடன் சேராது
விலகியே நிற்கிறது

அது
ஏழ்மை என்னும் ஏழாவது சுரம்
அதை
சுருதி சேர்த்து இசை பாட
ஓர் இசை கலைஞன்
இந்த நாட்டில் இன்னும்
உருவாகவில்லை

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 280

மேலே