மொழிநில கலாச்சாரம்

புவி சார்ந்தே வாழ்ந்தபொழுது
புலம்பெயர விருப்பமில்லை ,
பொருள்சார்ந்தே வாழும்போது
பிறந்தமண் நெடுந்தொலைவில் .

தாய்,அவள் முலைப்பாலின் ஊடே ..
மொழி ஒன்றை புகிட்டிவிட்டாள்.
உடைதனிலும் ,உணவினிலும்
உள்ளுரணவிலினும், பல் கலைதனிலும்
பொதித்து வைத்த கலாசாரம்....
வெளிக்கொணர களமின்றி,
பகிர்ந்துணர மனித மனங்களின்றி,
பொதிசுமந்தே பழகிவிட்டோம்
பண்பாட்டை இழந்துவிட்டோம்
பன்னாட்டு பணிகளிலே.

கலாச்சார பரிமாற்றம் ,
புது பரிணாம வளர்ச்சிபெறும்.
ஆனால்,
கலவைகொண்ட கலாச்சாரம்
அழகிழந்து பொலிவிழந்து
குழம்பிநிற்கும்.
மனித மனம் கலங்கிநிற்கும்
மரபணுவும் மதி மயங்கிநிற்கும்
சேர்க்கலந்த நண்ணீர்போல..
தெளிவிழந்து.

எழுதியவர் : (11-Aug-18, 3:30 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 47

மேலே