சொர்க்கம் சாத்தியமா
இரத்தம் தொய்ந்த அந்தக் கை,
திருடத் துணிந்த அந்தக் கை,
மலரைக் கசக்கி எறிந்த அந்தக் கை,
கத்தி சுமந்த அந்தக் கை,
மனதின் விகாரத்தையெல்லாம் அரங்கேற்றும் அந்தக் கை,
அடக்கியாளத் துடிக்கும் அந்தக் கை,
ஆடம்பரத்தின் மேல்,
ஆயுதத்தின் மேல்,
ஆய்ந்தறியா மனதின் ஆசை மேல் கொண்ட நம்பிக்கை...
நம்பிக்கை தவறுவதில் வழி மாறுகிறது உன் வாழ்க்கை,
என்று நீ அறிந்தால் ஆய்ந்து அந்த நம்பிக்கைகளை அறுத்தெறியத் துணிவாயே.
துணிந்து நீ பதரை நம்பினால் தோலுரிக்க அரிசியில்லாமை கண்டு கதறுவது அறியாமை,
பேதமையை பேணும் மனங்களெல்லாம் பெருமை பேசி திரியலாமே தவிர வேறெந்த பயனும் இல்லை அதனாலே.
அதனாலே யாம் உரைப்பது யாதெனில் சீர்மிகு தனித்துவம் உன் செயல் வெளிப்பட சீர்மிகு எண்ணங்களால் உன்னை சீர்திருத்தம் நிகழ்ந்திடு, நிகரில்லா உன்னில் புதைத்துள்ள சக்தியை ஒப்பில்லா அளப்பரிய செயல்களை ஞாலம் நலம் பெற அர்ப்பணித்திடு.
அர்ப்பணிக்கும் அந்நோடி உன் உள்ளம் உணரும் தெளிவில்லா நீ யாரென்று.
அத்தெளிவு பிறந்திட, உன்னில் பேதைமை மறைய சாத்தியமா என்றே நீ நினைத்த செயல்களெல்லாம் சத்தியமாக நடைபெறக் கண்டே உன் ஆன்மா ஆனந்தக் கூத்தாடும்.
உன்னாலே வாழும் பூமி சொர்க்கமாகும்...