5 இசைமாணவர் இறைவனை வேண்டல் - அன்பே வடிவெனும் அறவா - மலகரி
('லம்போதரா லகுமிகரா' என்ற மெட்டு)
பண் - மலகரி தாளம் - ஈரொற்று
பல்லவி:
அன்பே வடிவெனும் அறவா
துணை பல்லவி:
இன்பே தரும் இசையறிவருள் (அன்பே)
அ. 1
எங்கும் நிறை இறைவா உன்றன்
எழிலார் கழல் இணைபணி கின்றேன் (அன்பே)
2
தேவா உன் திருப்புகழ் பாட
தென்னோர் பண்ணுந் திறமுங்கூட (அன்பே)
3
தீங்கே விளைத்திடுஞ் சொல்லெலாம்
தீரவருள் தீந்தமிழிலே (அன்பே)
- மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
குறிப்பு:
இப் பாட்டு இசைமாணவர்க்கென்றே இயற்றப்பட்டது. தனித்தமிழ்ப் பாட்டை விரும்புவார் இதைப் பாடலாம்.