தமிழே நீ

அருள் தந்து
மருள் தந்து
இருள் தந்து போனாய்
என்னுள் பொருள் தந்து போனாய்

சந்தம் தந்து
நயம் தந்து
பாடல் தந்து போனாய்
என்னுள் சுகம் தந்து போனாய்

பிழை தந்து
மாற்றம் தந்து
மாயை தந்து போனாய்
என்னுள் நிலை தந்து போனாய்

தொடக்கம் தந்து
முடிவு தந்து
தியாகம் தந்து போனாய்
என்னுள் தொடர்கதையாய் போனாய்

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (13-Aug-18, 3:02 pm)
Tanglish : thamizhe nee
பார்வை : 1486

மேலே