எரியும் நினைவுகள்

இதம்
தந்துக்கொண்டிருந்த அனலில்
மேலும் சில காகிதக்கற்றையை
இட்டான் அவன்.
அதீத மகிழ்வை தந்த -அவளின் நினைவுகள் கவிதையான பிரதியது..!
அவனுக்கோ அது காகிதக்கிறுக்கல்.
எனக்கோ அது மீள்நிகழ்வின்
பெருக்கல்.

நினைவுகள் பற்றியெறிய
வளர்ந்துக்கொண்டேயிருந்தது
அவளின் இருப்பும்..!
அவன் இட்ட நெருப்பும்..!
-நேமா

எழுதியவர் : நேமா (16-Aug-18, 11:16 am)
சேர்த்தது : நேமா
Tanglish : eriyum ninaivukal
பார்வை : 121

மேலே