தமிழ் எனக்குயிர்

மொழிகளில்; தமிழ்
எனக் கழகு
தொன்மையிலும் காணும்
மாறா அதன் இளமை அழகு
கம்பன் கவிதைப் படிக்கையில்
தமிழின் சந்தம் அழகு
இராம காதை அழகு
சங்கத் தமிழ் அழகு
முத்தமிழாம் அமுதம் அழகு
யாப்பிற்கு தமிழ் காட்டும்
இலக்கண ஒழுக்கம் அழகு
தொன்மொழிகளிலே இன்றும்
பேசும் மொழியாய் இலக்கிய
மொழியாய் நாடக நாட்டிய
மொழியாய் இசைத்தமிழாய்
இயங்கிவரும் அதன் அழகே அழகு
அழகு தமிழ் எனக்குயிரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-18, 12:10 pm)
பார்வை : 490

மேலே