பஞ்ச என்றால்

பஞ்சபாணம் மாறனின் ஐம்மலர் கணைகள்
பஞ்சபூதம் இயற்கையின் ஐவகை உறுப்புகள்
பஞ்சாங்கம் நாளின் ஐந்து அங்கங்கள்
பஞ்சாமிருதம் ஐங்கனிக் கூட்டு பழனிப் பிரசாதம்
பஞ்ச தந்திரம் நீதிகள் கூறும் அழகிய கதைகள்
பஞ்சமம் எழுவகை நாதத்தில் பகரம் பேசும் சுரம்
பஞ்சகச்சம் மறையோர் அணியும் அழகிய ஆடை
பஞ்சபாண்டவர் அறப்போர் ஐவர்படை
பஞ்சசன்யம் கண்ணன் போருக்கு முழங்கிய சங்கம்
பஞ்சாப் ஐந்து ஆறுகள் ஓடும் பசுமை மாநிலம்
பஞ்சம் இல்லாமைக்கும் அடையாளமா இறைவா ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-18, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : panja endraal
பார்வை : 117

மேலே