காதல் என்றால் என்ன
காதல் என்றால் என்ன?
பிரபஞ்ச புத்தகத்தில் எழுதி வைத்த முதல் பக்க முன்னுரையா?
அன்பு என்ற கவிதை பாட ஏற்ற இன்னிசையா?
ஆண் பெண் என்ற ஈருடலில் ஓருயிராய் கலப்பதுவா?
மாற்றங்களின் தோற்றமாய் தோற்றங்களின் மாற்றமாய் இருப்பதுவா?
ஆணுக்குள் பெண்ணையும் பெண்ணுக்குள் ஆணையும் அறிமுகப்படுத்தும் அறிமுகமா?
தோற்றத்தினது தோற்றமாய் மாற்றத்தினது மாற்றமாய்
முடிவினது முடிவாய் இருப்பதுவா?
உலகம் என்ற தோட்டத்தில் உதிராமல் மலர்ந்து கொண்டேஇருக்கும் வண்ணமலர்களா?
உலகம் என்ற புல்வெளியில் விழுந்த உதிராத பனிநீரா?
பெண்ணுக்குள் ஆணையும் ஆணுக்குள் பெண்ணையும் தொலைத்திடும் விந்தையா?
உலக மக்கள் அனைவருக்கும் ஒன்றாய்பொருந்திடும் இறைமொழியா?
உலகோரின் இதயங்களை தனது சுற்று வடடத்தில் சுழலச்செய்யும் இளம்பரிதியா? ........இந்த காதல்.