இருள்
இருந்த மனது அது
பேய்க்களின் பட்டறை
காரிருள் ..............
அது திசை எல்லாம்
சூழ்ந்து பரவி இருந்தாலும்
களைந்திடுவான் தன்
கதிரொளி பரப்பி
உதய சூரியன்
இத்தனை ஏன், இரவின் இருட்டில்
ஒளிதரும் விளக்காய்
இருப்பான் சந்திரனும் ............
ஆனால் இந்த இருள் சூழ்ந்த
மனது....மனதெல்லாம் இருட்டு
சிந்தனையில் இருட்டு
அதைத்தூண்டும் புத்தியிலும்
இந்த விபரீத இருளை
சூரிய, சந்திரரும் கூட
போக்கமுடியாதே .............
இருண்ட மனது பேய்க்களின்
பட்டறை.............