முதுமொழிக் காஞ்சி 68

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பெருமைநோ னாதோன் சிறுமைவேண்டல் பொய். 8

பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம்
சொல்வது என்னவென்றால் பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான்
தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்.

பதவுரை:

பெருமை - பிறர் தன்னை அரியனாகக் கொள்ளும் பெருமையை,
நோனாதோன் - வேண்டாதவன், சிறுமை - இழிகுணத்தை,
வேண்டல் - விரும்புதல், பொய் - பொய்யாம்.

பிறர் தன்னை அரியனாக மதித்தலை விரும்பாதவன் இழிகுணத்தை விரும்பான்.
'பெருமை பெருமிதமின்மை' ஆதலால், பெருமிதம் இல்லாதவன்
இழிகுணத்தை விரும்புவதில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-18, 3:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 103

சிறந்த கட்டுரைகள்

மேலே