எழுவாய் மனமே

தோல்விகள் பல வந்திட//
எதிரிகள் அதைக் கண்டிட//
சந்தோசம் கொண்டிட//
எழுவாய் மனமே வென்றிட//

கவலைகள் குப்பைகளாய் உன் மனதில் நிறைந்திட//
முயன்றிடு நீயோ அதை அகற்றிட//
தடைகளை நீயோ உடைத்திட//
சாதனைகள் பல புரிந்திட//
துரோகிகள் தலை குனிந்திட//
எழுவாய் மனமே வென்றிட//

புதியவை பல நீ அறிந்திட//
தோல்வியில் பாடம் கற்றிட//
தன்னம்பிக்கை மனதில் உதித்திட//
பயத்தை அது விலக்கிட//
அறிவின் உச்சம் நீ அடைந்திட//
எழுவாய் மனமே வென்றிட//

போலி உறவுகள் உன்னைத் தொடர்ந்திட//
சதி வலைகள் உன் மேல் படர்ந்திட//
உன்னை வீழ்த்த அவை துணிந்திட//
அதை தகர்க்க நீ பயின்றிட//
எழுவாய் மனமே வென்றிட//


(தனிமையின்_நண்பன்)

எழுதியவர் : தனிமையின் நண்பன் (21-Aug-18, 5:33 am)
சேர்த்தது : KiyasKM
Tanglish : ezhuvay maname
பார்வை : 778

மேலே