உன்னால் முடியும்
♡♡உன்னால் முடியும் ♡♡
உன்னை மட்டும் நம்பிடு
உள்ளத்தில் உறுதி கொண்டிடு
உணர்ச்சிகளைத் தள்ளி விட்டிடு
உலகை உனக்கென மாற்றிடு
இலட்சியத்தை அடைந்திடு
இறைவனை என்றும் வணங்கிடு
இமயம் வரை சென்றிடு
இலக்கை உடனே எட்டிடு
ஆசையை சற்று மறந்திடு
அமைதியாய் சற்றுப் பொறுத்திடு
அறிவை தன்னில் பெருக்கிடு
அடைவேன் உச்சம் என்றிடு
இன்பத்தை மனதில் நிறைத்திடு
இருளை உன்னில் விலக்கிடு
தடைகளைத் தாண்டி எழுந்திடு
சாதனை பல கண்டிடு
(தனிமையின் நண்பன் )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
