இயந்திரங்கள்

☆☆இயந்திரங்கள்☆☆

இறைவன் மனிதனைப் படைக்க
அறிவு பல அவனுக்குக் கொடுக்க
விதியை மதியால் ஜெயித்தானோ
தன்னைத் தானே படைத்தானோ

இயற்கையின் இயல்பை மறந்து
செயற்கையில் இயந்திரத்தை படைத்து
ஆற்றலில் உச்சம் கண்டானோ
அதிசயம் என வியந்தானோ

தன் வேலையை தான் செய்ய மறக்க
இயந்திரத்தை இவன் படைக்க
புதிய உலகம் பிறந்ததோ
இரும்பு உலோகம் நிறைந்ததோ

மனித உருவில் மனிதனாய்ப் பல
இயந்திரங்கள் உதித்தன அங்கே
வேலையின்றி மனித குலம்
தவிக்கிறதே இங்கே

உழைப்பை மறந்து இயந்திரத்தை நம்பி இருக்காதே தம்பி
அறிவியலை கண்டு நீ வியந்து
மாய உலகில் விழுந்திடாதே நம்பி

(தனிமையின் நண்பன்)

எழுதியவர் : தனிமையின் நண்பன் (21-Aug-18, 5:56 am)
சேர்த்தது : KiyasKM
பார்வை : 104

மேலே