ஒரு துளி காயங்கள்

மழலை மொழி கடக்கும் முன்
காமுகன் மொழி கற்பிக்கப்பட்டாள்

விரிச்சம் அடையும் முன்
மொட்டு பறிக்கப்பட்டது
பள்ளியில்

கூடல் சூட்டில்
குப்பைத் தொட்டி எரிகிறது
பச்சிளம்குழந்தையின் அழுகுரல்

நிலவின் ஒளியில்
ஞாபகங்கள் என்னைச் சுடுகிறது
விதவை கண்ணீர்

தீயிட்டுக் கொள்கிறேன்
நீயில்லா இரவை
தீ குச்சி

கரு கூட்டம்
களைக்கப்பட்டது
சூரியன் பார்வையில்

எழுதியவர் : சண்முகவேல் (22-Aug-18, 5:20 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே