நல்ல மனம்

நல்ல மனம் கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு
மாங்கல்யம் தொட்டுப்பேசிய
பின்னும் மானம் குட்டி சுவராச்சு

அள்ளிப்பருகிய காமம் அது
மூளையை தின்று தீர்த்துவிட
அச்சு வெல்ல அதரங்கள்
முத்திய வேளையில்
அத்தனையும் மறந்திடுச்சே!

துள்ளி திரிந்த கால்களை கட்டிப்போட்ட
காமம் இன்று நானே தவமென்று
ஆசையை கொண்டாடுதே!

ஒத்தரோசா கண்ணைப் பார்த்து பேச
மனம் ஒப்பலையே
மல்லிகை சூடிய மார்பைதானே
தேடுது மனம் வேசம் கலைத்தே!

எட்டு வைத்து எட்டு வைத்து
சிவனை பார்க்க நான் நினைத்தேன்
கண் வைத்த இடமெல்லாம்
பெண்மேனி கொதிக்குதே!
பெண்மேனி கொதிக்குதே!

பக்தனோட வாழ்வும் புத்தனோட வாழ்வும்
நிலையில்லையே அப்படியிருக்க
இந்த அற்பனும் எதற்கு கவலைப்படணும்
எனும் அசரீரி கேட்க்குதே -
மீண்டும் அவள் வளர்க்கும் காம வேள்வியில்
உடன்கட்டை ஏறிட முடியட்டுமே
எனது வாழ்க்கையும் வாழ்க்கையும்!!!............

எழுதியவர் : மேகலை (22-Aug-18, 4:52 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : nalla manam
பார்வை : 142

மேலே