ஏன் எனக்குள்

என் தோழியே
உன் முகம் பார்த்து பேசாத நாட்கள் இல்லை
விரல் இடையில் விரல் சண்டையிட நிமிடங்கள் இல்லை
உன் தோலில் சாய்ந்து உறங்க இரவுகள் இல்லை
நாம் போகாத பயணம் இல்லை
பேசாத பொழுதுகள் இல்லை
பாடாத பாடல் இல்லை
பார்க்காத படங்கள் இல்லை

இன்றே
உன் விழி பார்க்க என் விழி தயக்கம் கொண்டது
உன் விரல் தீண்டினால் ஏதோ தாகம் கொள்கிறது
இரவின் ஓர் நிமிடமும் கடக்க கார்காலமாக உள்ளது
பயணம் என்றால் பயம் தான் வருகிறது
பேசப் பொழுதுகள் வேண்டும் என்று மனம் ஏங்குகிறது
ஒரு பாடல் கேட்டாலும் உன் ஞாபகம்
பாடம் பார்த்தாலும் உன் ஞாபகம்
ஏன் எனக்குள் இந்த மாற்றம்

எழுதியவர் : சண்முகவேல் (23-Aug-18, 9:36 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : aen enakkul
பார்வை : 446

மேலே