என் அன்பு மகனுக்கு ஒரு வாழ்த்துமடல்
இறையருளோடு .....
ஒய்யாரமாய் இன்று ஒன்பதாம் அகவைதனை
முத்தமிடும் எங்கள் பாசதேசத்தின் இளவரசனே....
அன்பில் இனியவனே .... எங்கள் அழகான சூரியனே
புன்னகை புது மலரே .... புவி ஆள வந்த பொன் மனமே........
நீ பிறந்த இந்நாளில் .....
உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழிய நீ பல்லாண்டு
வளமோடும் நலமோடும் என உன்னை வாழ்த்த இதோ இந்த மடலோடு
நானும் உந்தன் வண்ண முகம் காண........
இக்கரையில் வாழ்ந்தாலும் என்றென்றும் உன்மீது
அக்கறையோடு வாழும் இந்த அப்பாவின் வாழ்த்து மடல் ...
எங்களின் இனிய ராகுலே .....
எங்கள் வாழ்வின் விளக்கமாய் இறைவன் வடித்து தந்த ஓவியமே ...
“அப்பா” என முதன்முதலாய் என்னை அழைத்த அன்பான காவியமே ....
வாழ்வெல்லாம் வண்ணமயமாய் ஆனாதடா - உன் வரவால்
ஆம் எங்களின் வாழ்வெல்லாம்
வண்ணமயமாய் ஆனாதடா - உன் வரவால்
என் அன்பான நாயகனே
நேற்று வரை தத்தி நடந்து தாவி குதித்த நீ
இதோ இன்று எந்தன் தோள் உயரம் வளர்ந்து விட்டாய் ...
மாயக்கண்ணன் லீலைகளை கேட்டதுண்டு பார்த்ததில்லை .....
நீ எங்களின் மகனாக பிறக்கும் வரை .......... ஆம்
மாயக்கண்ணன் லீலைகளை கேட்டதுண்டு பார்த்ததில்லை .....
நீ எங்களின் மகனாக பிறக்கும் வரை ...
எங்களின் சிங்கார கண்ணனே .... எங்களின் அன்பான மன்னனே ......
நீயோ பானை கொண்ட வெண்ணெய் திருடவில்லை ....
உன் மீது பாசம் கொண்ட உள்ளங்களை அல்லவா
மொத்தமாய் திருடிவிட்டாய்.......... ஆம்
எங்களின் சிங்கார கண்ணனே
உன் மீது பாசம் கொண்ட உள்ளங்களை அல்லவா
மொத்தமாய் திருடிவிட்டாய்.........
எப்போதும் சேட்டையாடா ... எங்கேயேயும் சேட்டையாடா
அப்பப்பா அவன் செய்யும் சேட்டைக்கு அளவில்லை ... என
அன்றாடம் அலுத்து கொண்ட உறவுகள் எல்லாம் ...
அவனா இவன் என்று ... ?
அதிசயித்து போகின்ற அளவிற்கு
நீ உயர்வாய் எனும் நம்பிக்கை எனக்குண்டு ... ஆம்
அவனா இவன் என்று ... ?
அதிசயித்து போகின்ற அளவிற்கு
நீ உயர்வாய் எனும் நம்பிக்கை எனக்குண்டு .
என்னில் பாதியாய் பிறந்தவனே என்றென்றும்
உன்னன்பில் மட்டுமே இளைப்பாறுகின்றேன் ...
காலத்தின் கோலத்தால் இன்று கடல் கடந்து நிற்கின்றேன் ...
என்றாலும் ....நீ பிறந்த இந்நாளில்
புத்தாடை நீ உடுத்தி புன்னைகையோடு நின்றிருக்க
இனிப்பு ஏதும் தருவாயா என ஏங்கி நிற்கும் மழலை போல
நானும் கூட ஏங்குகிறேன் உன் திகட்டாத முத்தம் பெற .. ஆம்
நானும் கூட ஏங்குகிறேன் உன் திகட்டாத முத்தம் பெற.......
தவமாய் தவமிருந்து நாங்கள் பெற்ற செல்வமகனே ...
உன்னை விஞ்சிய கொஞ்சும் கவிதை
இந்த மண்ணில் ஏதடா ? எழில்
கொஞ்சும் தமிழ் கூட உன்னை கொஞ்ச
என்னை போலே தவமிருக்கும் கேளடா........
எங்களின் புன்னகை மலரே ... புவியாள வந்த மன்னனே ...
முன்னோர்க்கும், மூத்தோர்க்கும் என்றென்றும்
பேரன்பும் பெருமதிப்பும் நீ தந்து ... ...
அன்னைக்கும் தந்தைக்கும் என்றென்றும்
அன்போடு ஆதரவும் நீ தந்து
உடன்பிறந்த உறவுக்கும்....... உயர்வான நட்புக்கும்
நற்பரிவும் பாசமும் நீ தந்து ...
மண்ணில் வாழும் யாவருக்கும் என்றென்றும்
மாண்புமிகு மனிதனாய் நீ இன்னும்
நூறு ஆண்டுகள் இந்த மண்ணில்
வளமோடும் நலமோடும் வாழ்ந்திட
அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
உந்தன் பட்டு கன்னத்தில் பாசமாய் முத்தமிட்டு
இதோ இந்த கவிதையோடு நானும் வந்து
உனை உளமார வாழ்த்துகின்றேன்
அன்பு கலந்த ஓராயிரம் முத்தங்களுடன் .......
வாழ்க வளமுடன் ...
இப்படிக்கு
உன் பாசமிகுந்த அப்பா ....