குழலூதும் கண்ணன் மகிமை

வில்லேந்தவில்லை அம்புகள் தொடுக்கவில்லை -இவன்
வேய்ங்குழல் கீதத்தாலே ஈரேழுஉலகும் மயங்கிட
வெறும் கையாலே மாமல்லரை வீழ்த்தி மாமன்
துட்டன் கம்சனையும் வீழ்த்தி பாரதப்போரில்
பார்த்தனுக்கு சாரதியாய் அமர்ந்து கீதோபதேசம் செய்து
சங்கூதி துட்ட துரியோதனரை ஓடவிட்டு பஞ்சபாண்டவர்
படைகொண்டு பூண்டோடு அழித்து தர்மம் நிலைநாட்டினான்
குழலும் சங்கும் கொண்டே பார்த்தசாரதி கண்ணன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Aug-18, 11:21 am)
பார்வை : 176

மேலே