அரக்கத்தனமான அரசே

மண மாலையோடு வந்தேன்
இன்று மண நாள் என்று வந்தேன்
வரம் தர மறுத்தாய் மொழி
மறந்து நின்றேன்.


நகை அணிந்து வந்தேன்
நாணத்தோடு வந்தேன்
கரம் தொட மறுத்தாய்
ஏங்கி நின்றேன்.

பட்டு உடுத்தி வந்தேன்
பொட்டு வைத்து வந்தேன்
கிட்ட வராமல் வெறுத்தாய் சிலையாகி நின்றேன்.

ஆசையோடு வந்தேன்
ஓசை இல்லாமலே உதாசனம் செய்தாய்
பேச்சு இழந்து நின்றேன் .

கோலமிட்ட வாசலிலே
கொலுசோடு வந்து நின்றேன்
கோபமாக நீ வெறுத்ததுமே என்னையே
மறந்து மரமாக நின்றேன்.

பொன் முத்தம் பதிக்க என் இதழில்
வண்ணம் தீட்டி வந்தேன்
பெண் இவளை திட்டி விட்டாய்
செய்வது அறியாதவாறு
தயங்கி நின்றேன்.

கருணை நிறைந்த கருணாகர மன்னா
காரணம் இல்லாது என்னைக்
கைவிட்டதும் ஏனோ மன்னா.

மங்கை இவள் உள்ளம்
கங்கை இல்லை நீ அள்ளி
இறைத்து விட்டுப் போக

நங்கை இவள் கை பொம்மை இல்லை
நீயும் தூக்கி வீசு விட்டுப் போக.

என் விழி மீனை கண்ணீரிலே
நீந்த விட்டு நீயோ
போகின்றாயே தேரினிலே.
மண்றாடி விட்டேன் வாதாடி விட்டேன்
உன் மனம் இரங்க வில்லை
மான்று விட மாட்டேன்
நானோ ஏமாளி இல்லை
புரட்சி பெண் ஆனேனடா அரக்கத்தன அரசனே.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (30-Aug-18, 6:34 pm)
பார்வை : 441

மேலே