தமிழன்

உயர்ந்து நிற்கும் கோபுரங்களும்
செதுக்கி வைத்த சிற்பங்களும்
நிமிர்ந்து நிற்கும் தூண்களும்
விரிந்து கிடைக்கும் பிரகாரங்களும்
வியக்க வைக்கும் கோவில்களாய்

கம்பிரமாய் அமைந்த அரசவையும்
அழகின் இடமாய் அந்தபுரமும்
காவலனாய் உயர்ந்த மதில்களும்
ரகசியமாய் அமைந்த சுரங்கங்களும்
திகைக்க வைக்கும் அரண்மணைகளாய்

நாடு செழிக்க அணைதடுத்து - எல்லைகளை
விரிவாக்க நாடுகளை கைப்பற்றி
வீரம் பெறுக படையெடுத்து - பலரை
ஆச்சர்யத்தின் உச்சத்தில் ஆளுமையையும்

இன்னும்
ஆயிரம் ஆயிரம் படைப்புகளையும்
அவற்றுள் ஆயிரம் அதிசயங்களையும்
அழகாய் உருவாக்கி அளித்தான் தமிழன்
ஆனால் இன்றோ அவற்றை
பாதுக்காக்க இயலாத பேதைகளாய்

எழுதியவர் : புவனேஸ்வரி (31-Aug-18, 10:20 pm)
சேர்த்தது : புவி
Tanglish : thamizhan
பார்வை : 551

மேலே