அன்பியல் அழகியல்
திருமண வாழ்த்து மடல்
----------------------------------------
சட்ட நுணுக்கம் அறிந்தவர்
நல்ல தர்ம சிந்தை உடையவர்
ஆர்ஆர்கே எனும் வழக்கறிஞர்
ராமகிருஷ்ணன் அவர்கள்...
இவர் வழக்குகளில்
ஆஜராகும் போதெல்லாம்
நீதி தேவதை ஆனந்தம்
மிகக் கொள்வாள்...
திரு. ராமகிருஷ்ணன்
திருமதி. விஜயஸ்ரீ ராமகிருஷ்ணன்
இவர்களின் புதல்வன்
திருவளர்ச்செல்வன்
கௌதம் ராமலிங்கம்
பொறியியல் நிர்வாகவியலில்
தேர்ச்சி பெற்றவர்...
அன்பியலில் ஆளுமை கொண்டவர்...
தச்சநல்லூரில் பிறந்து
எல்லா ஊருக்கும் சாலை போடும்
நெடுஞ்சாலைத் துறையில்
பணிபுரிந்த உதவிக்
கோட்டப் பொறியாளர்...
சாலைகளில் மட்டுமல்ல
உறவிற்கும் உறவிற்கும்
நட்புக்கும் நட்புக்கும்
உறவிற்கும் நட்புக்கும்
பாலம் அமைப்பதில் வல்லவர்
திரு. அழகர் அவர்கள்...
திரு. அழகர்
திருமதி. மீனாட்சி அழகர்
இவர்களின் புதல்வி
திருவளர்ச்செல்வி வைஷ்ணவி
கணினிப் பொறியியல் கற்றவர்...
கனிவில் அன்பில் சிறந்தவர்...
இல்லறம் எனும் நல்லறம் காணும்
திருவளர்ச்செல்வன் கௌதம்
திருவளர்ச்செல்வி வைஷ்ணவி...
இல்லறப் பூங்காவில்
உலா வரப்போகும்
உல்லாசப் பறவைகளே!
அன்பான உதாரண ஜோடியாய்
செல்வங்கள் பதினாறும் பெற்று
இனிதே வாழ்க... இன்பமாய் வாழ்க!!
நீடூழி வாழ்க... நிலைத்த புகழோடு வாழ்க!!!
அன்புடன் வாழ்த்தும்...
ஆர். சுந்தரராஜன்.
👍🌹