கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி
அசுரனை அழிக்க வேண்டி அன்னையின் கருவில் உருவாகி
அவதாரம் என்று அவளுக்கு தன் உருக்காட்டி உணர்த்தி
அக்கறை கடந்து ஆங்கோர் அன்னையிடம் வளர்ந்து
அவள் அதிசியக்க அண்ட சாகரமும் தன் வாயினில் காட்டி
அவனியாவும் வியக்க ஒரு விரலால் மலையை தூக்கி பிடித்து
ஆணவத்தால் தலை தூக்கி ஆடிய அரவமதனை அடக்கி
ஆயர்குல பெண்களுக்கு அபயமளித்து ஆட்கொண்டு
அகிலமனைத்தையும் அசைய செய்யும் பரம் பொருள்
குழந்தையாகப்பிறந்த தினமிதனை குவலயம் கொண்டாடும் நாளிதுவே !

