குட்டுக்கா

ஏன்டி காத்தாயி....
என்ன யக்கா?
இந்த ரண்டு மூணு நாளா செய்தியக் கேட்டயா?
என்ன செய்தி யக்கா?
'குட்டுக்கா, குட்டுக்கா'ன்னு எல்லாச் செய்திலயும் சொல்லறாங்க.
ஆமாம் யக்கா. நானுங்கேட்டேன். அது யாராவது பட்டணத்துப் பொண்ணோட பேரா இருக்கும்.
எனக்கும் அந்தச் சந்தேகம் தான்டி வருது.
என்ன யக்கா சொல்லற?
பட்டணத்தில 'பூமிக்கா, சாமிக்கா, லத்திக்கா, கிருத்திக்கா இரித்திக்கா' னெல்லாம் பொண்ணுங்களுக்குப் பேரு வைக்கறாங்க. அது மாதிரி ' 'குட்டுக்கா'வும் பொண்ணுங்களுக்கு வைக்கிற பேரா இருக்கும்டி.
நீ எது சொன்னாலும் இருக்கும் யக்கா.