புனிதமான கூடா நட்பு

ஏன்டிச் செல்லம் கலை, என் மனைவிக்குத் தெரியாம நானும் உன் கணவனுக்குத் தெரியாம நீயும் நெருங்கிய நட்பில் இருக்கிறோம்.
அந்தச் சனியன்களை இப்ப எதுக்கு ஞாபகப்படுத்தறீங்க?
நம்ம ரண்டு பேரோட நட்பும் புனிதமானது. போன பிறவில நீயும் நானும் கணவன் மனைவியா இருந்திருப்போம்.
ஆமாங்க. எனக்கும் அப்படித்தான் தோணுதுங்க. அந்தச் சனியனைப் பிடிச்சு எனக்குக் கட்டி வச்சுட்டாங்க. நான் மனசார உங்களத்தான் நான் கணவனா நெனைக்கிறேன்.
இப்படிப்பட்ட நட்பு நம்ம மாதிரி பல ஜோடிகளுக்கு இருக்குது. இதெல்லாம் ஆண்டவன் செயல்னுதான் சொல்லணும்.
ஆமாங்க இந்த மாதிரி புனிதமான நட்பை பெரும்பாலான நாளிதழ்கள் 'கள்ளக்காதல்' னு அச்சிட்டு அசிங்கப்படுத்தறாங்க.
ஆமாம். ஒரு நாளிதழ் மட்டும் 'கள்ளக்காதல்'னு செய்தி போடாம, கவுரவமா 'கூடா நட்பு'ங்கற சொற்றொடரைப் பயன்படுத்தினாங்க. அதுவும் இப்ப மாறிப்போச்சோ என்னவோ தெரில.
அது கெடக்குது உடுங்க. அந்த நாளிதழ்க்காரங்க என்னவோ எழுதிட்டுப் போறாங்க. நாம எதுக்கு அதப்பத்திக் கவலப்படணும்.