அன்னையா நீ

உலக முகவரி தந்தாய் எங்களுக்கு
மோட்ச முகவரியும்
உன் கையால் தந்து விட்டாய்...
பிரசவத்தின் உயிர் வலி அறிந்த நீ
காம வழிக்கு ஆசைப்பட்டு
எங்களுக்கு சொர்க்கத்திற்கு
வழிகாட்டி விட்டாய்..
உயிர் வாழ அன்னையாய்
முலை கவ்வ எங்களுக்கு
அனுமதி தந்த நீ
இன்று எப்படி
கண்டவர்க்கும்
மனவாசல் திறந்தாய் ??
முன்பு
குழந்தையாய் நாங்கள்
வாய் திறந்து பேசாத நேரத்தில் கூட
எங்கள் விழிகள் பார்த்து ரசித்திருப்பாயே??
ஆனால்
இப்போது விஷ மகாராஜா
எங்களை ரசித்து கூட்டிப் போய்
காலனிடம் விட வேண்டும் என்று
ரசித்து ரசித்து திட்டமிட்டாயோ??
காலம் முழுவதும் கிடைத்திருக்க வேண்டிய
அன்பான இன்பமான அருமையான
குடும்ப சூழ்நிலையை விடுத்து
இன்று எங்களையும் தொலைத்து
நீயும் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டாயே