மருமகள்

மருமகள் அவள் மறு மகள்
கண்ணால் ஈன்று எடுக்கும்
திருமகள் உறவு என்று உரிமையாக
வரும் மகள் உள்ளத்தில் பல
கனவுகளை சுமந்து இல்லத்தில்
நுழைவாள் அவள் /

பிறந்த வீட்டு
உரிமையை இழந்து புகுந்த வீட்டுக்கு
வரும் மணமகள் அவள் பெற்ற
அன்னையின் கரம் விட்டு தத்து
அன்னையென அத்தையை எண்ணி
வரும் பெண் அவள் /

பாசத்தை
பெரிதாக நினைத்து பாதம் தூக்கி
படி ஏறி வரும் மங்கை அவள்
மாமி மருமகள் உறவு அன்னை பிள்ளை
போல் வளரும் வரை இல்லத்தில்
இன்பம் விளையாடும் அமைதி
நிழலாடும் இல் வாழ்வு
நல்வாழ்வாகும். /

மருமகளை மாற்றான் விட்டுப்
பிள்ளையாக மாமியாரும்
மாமியாரை தனக்கு சுமையான
உறவாக மருமகளும்
நினைக்க ஆரம்பித்தால்
அங்கே பருத்தி போல் வெடித்து சிதறி
விடும் அத்தனை சந்தோஷமும் /

அதற்கு
காரணம் ஈட்டிக்குப்
போட்டியாக உரையாடுவது
விட்டுக்கொடுக்கா மனமும்
வேற்றுமை காட்டும் குணமும்
தனக்கு மட்டும் அனைத்து
உரிமை என்ற தவறான கோட்பாடும்/

இவைகளை தட்டி விட்டால் மகன்
வழி தொட்ட சொந்தம் சொர்கத்தைக்
கொடுக்கும் பக்கத்து வீட்டுக் கண்ணுக்கும்
பொறாமை பிறக்கும் மாமி மருமகள்
உறவுக்கு உதாரணமாக உங்கள்
பெயர் சிறக்கும் /

அன்னைக்கு நிகர்
அத்தையும் தந்தைக்கு சமம் மாமனாரும்
என்று வரும் மருமகள் நினைத்தால்
எங்கும் பிறக்காது மாமி மருமகள் சண்டை.
தெருவில் பறக்காது குடும்ப கௌரவம். /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Sep-18, 11:54 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : marumagal
பார்வை : 470

மேலே