இயலாமையில் ஒரு ஆதங்கம்
உடலே பொய்யிலே உருவானதோ, பொய்கள் பொய்களை வைத்துக் கட்டி மாலைகளாக்கி அணிகிறாயே,
அவற்றின் நாற்றம் உணர்ந்தாயோ?
அழகென்று கூறி ஆழக்கிணற்றில் உள்விழுந்து தவிக்கிறாயே,
உன்னைக் காப்பாற்ற அங்கே எவரும் இல்லை,
நீ கிணற்றினுள்ளே அழுகிச் சாவாய்.
சீவனை மதியாத நீ செய்த பாவத்தில் பங்கீட்டு உன்னை சுற்றிலும் அனைவரையும் பாவியாக்க நினைக்கிறாய்,
பாவம்! நீ செய்ததன் பலனை நீ பெற தின்றவர்களும் தின்னப்பட்டதன் பழியுணர்வுக்கு பலியாகிட அறிவறிந்தும் விலக முடியாதவாறிருக்க மனசாட்சி நீதி கேட்கிறது,
காட்டுமிராண்டிகளுக்கு நடுவில் பிறந்தாலும் மனசாட்சியை மீற முடியாது இருதலைக்கொள்ளி பாம்பாக நானே அமர்ந்திருக்க இன்னொரு சந்தர்ப்பத்தை எனக்கு உண்டாக்கிவிடாதிரு இறைவா என்று அனுதினமும் துதிக்கிறேன்.
அவ்வப்போது கழற்றி மாட்டுவதற்கு மனசாட்சி என்ன சட்டையா?
என்ற போது இறைவன் ஏன் எல்லாவற்றிருக்கும் அமைதி காக்கிறான்?
தவறைத் தடுக்கவில்லை,
தண்டிக்கமட்டும் வருவானோ,
பயத்தினிலே பலர் துதிக்க உயிரை கொன்று இறை பசி தீர்க்கிறேனென்று முனைந்து செயல்படுவர் கேட்பரோ நாம் சொன்னால்?
செவிடான அந்த காதுகளில் நற்சொற்கள் விழுமோ?
பறிபோன மூளை விழித்துணர்ந்திடுமோ?