சுதந்திரதாகம்
ஆள்பவர்களிடம்
அடிமைப் பட்டு கிடந்த காலம்
தியாக வீரர்களால் போனது!
சுதந்திர இந்தியா உருவானது!
எவர் கண்ணேனும் பட்டதோ?
நம் மதி மயங்கி விட்டதோ?
ஊழலுக்கும்,லஞ்சத்திற்கும் தலைவர்கள் அடிமைகளாய்,
சோம்பலுக்கும்,மதுவிற்கும்
ஆண்கள் அடிமைகளாய் ,
தொலைக்காட்சி பெட்டிகளுக்கு
பெண்கள் அடிமைகளாய்,
இணையவழி விளையாட்டிற்கு
குழந்தைகள் அடிமைகளாய்,
கையடக்க கைப்பேசிக்கு
மொத்த பேரும் அடிமைகளாய்
இருக்கும் நிலை என்று தான் மாறுமோ?
மற்றுமொரு சுதந்திரம்
நமை என்று வந்து சேருமோ?