பூவே பொன் பூவே

உன் கன்னங்கள் அழகா
கலைந்திருக்கும் குழலழகா
வண்டு போல் விழியழகா
வண்ணரத உடலழகா
பொன்போன்ற முகம் அழகா
பொக்கை வாய்ச் சிரிப்பழகா
எண்ணங்கள் யாவிலும் எப்போதும்
கொலுவிருக்கும் எழிலரசி நீயடி
மனதில் பூத்து மணக்கும்
என் முல்லைச் சரமே
உடல் தழுவி சுகம் நிறைக்கும்
இளந் தென்றல் காற்றே
அன்றலர்ந்த தாமரை போல்
அருகே நீ சிரிக்கையிலே
சூரியன் கண்ட பனி போலே
என் சோகமெல்லாம் தீர்ந்திடுமே

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (10-Sep-18, 11:45 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : poove pon poove
பார்வை : 5784

மேலே