மனமே மனமே

மனமே மனமே மலராய் நீ
என்னுள்ளே
உன் மலர்ச்சியால் மகிழ்வுடன் நான்

பின்னே உன் வாட்டம் கண்டதும்
என் முகம் வாடுகின்றதே ஏன்/
நீ என்னுள் வாடா மலராய்
இருந்து விடக் கூடாதோ /

சிலசமயம் என்னை கசக்கி பிழிகின்றாய்
நீ கவலையில் தோய்ந்து விட்டால்
என்னால் என்ன செய்ய முடியும்
துவண்டு விடுவேன் அற்பமனிதன் நான் ,

உன்னால் வாழும் நான்
உயர்ந்து நிற்கவும் சோர்ந்து நிற்கவும்
நீதான் காரணமே
வாழ்வின் அச்சாணியே நீதான்

மனமே நீ துவளாதே
நீ துவண்டு விட்டால் நான் சுருண்டு விடுவேன்
கலங்காதே கலங்க வைக்காதே
மனிதனின் வாழ்வே உன்னிடம் அடைக்கலம்
,
ஓர் அன்னையின் வடிவம் நீ
அணைப்பதும் நீயே, ஆறுதல் தருவதும் நீயே
மனம் சோர்ந்து போனால்
பாவம் மனிதன் என்ன செய்வான்

மலராய் என்னுளே என்றும் வாடா மலராய்
மலர்ந்து கொன்டேயிரு ,
நான் மலர்ந்திருக்க
மகிழ்ச்சிப் பிழம்பாய் நீ வேண்டும் என்னுள்

மனமே மனமே மகிழ்வாய் மனமே
மனமே மனமே வாடா மலராய்
என்றும் நீ என்னுளே வேண்டும் வேண்டும்
மனமே மனமே மலராய் நீ

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Sep-18, 11:48 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : maname maname
பார்வை : 233

மேலே