அர்த்தம் சொல்வாயா

அர்த்தம் சொல்வாயா

வானவில்லின்
வசந்தத்தில் ஓர்நாள்
வஞ்சியின் முகம் கண்டேன்

வெண்ணிலாவின்
வெளிச்சத்தில் ஓர்நாள்
அவள் வெட்கத்தின் கிலி கண்டேன்

வைகறை மேகம்
ஓர்நாள்
நம்மை வாழ்த்தியும் கண்டேன்

இமயத்தின் முடியில் ஓர்நாள்
நம் இதயங்கள் சேரக்கண்டேன்

கார்மேக மழையில் ஓர்நாள்
நம் கைகள் தழுவக்கண்டேன்

நெடுந்தூர நடையில் ஓர்நாள்
நம் நெஞ்சம் நெருங்க கண்டேன்

இன்றோ
நம் இதயங்கள் அருகருகே இருந்தும்
உன் இமைகள் மட்டும் பேசியதேன்

மொழியின் மீது கொண்ட கோபமா இல்லை
என் விழியின் மீது கொண்ட மோகமா

உன் இமை மொழிக்கு அர்த்தம் சொல்வாயா இல்லை
அகராதியில் அர்த்தம் தேடியே என் ஆயுள் கழிக்கவா

எழுதியவர் : இளவல் (15-Sep-18, 3:40 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : artham solvaayaa
பார்வை : 439

மேலே