காந்தியடிகள்

காந்தியடிகள்

போர்பந்தரில் உதித்து, பாரிஸ்டர் பெற்று ;
தீமைகள் அற்று, நன்மைகள் சேர்த்து;
அறவழியில் போராடி, ஆங்கிலேயரை எதிர்த்து;
இயக்கங்கள் பல துவக்கி, சிறைவாசம் சென்று;
சத்தியசோதனையால் வென்று, வெள்ளையர்களை வெளியேற்றி;
வெற்றித்திலகம் இட்டு, இந்தியாவை பெற்று;
விடுதலை கொடுத்த மாமணியே!
உம்மைப் புகழ்ந்துறைக்க வார்த்தைகள் தேடினேன்
அவை பணிவோடு வணங்கி நின்றன.
இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தறவே பிறந்தார்போல
விடுதலைக்குப் பின்னரே மறைந்தீரே!
அறத்தில் ஆழியாகவும் அன்பில் அறிஞராகவும் விளங்கினீரே!
உம்மைப்போல் தலைவர் உண்டோ, உலகெங்கும் ஒளித்தவரே!
பாருலகம் போற்றும் மகானே எங்கள் தந்தை காந்தியடிகள்.

எழுதியவர் : தஸ்பீஹா பானு (15-Sep-18, 9:23 pm)
சேர்த்தது : Thasbeeha
பார்வை : 51

மேலே