வணங்குகிறோம் கலைஞரே

மொழியை மூச்சாக்கி
இலக்கணத்தை இதயமாக்கி
சொற்களை சிந்தையாக்கி
இலக்கியங்களை இமைகளாக்கி
தமிழ்த்தொண்டையே வாழ்வாக்கி
மொழியோடு விளையாடும்
தமிழ்த்தாயின் தவப்புதல்வரே !!
இளமை துள்ள துள்ள
எழுத்துகளை மெல்ல மெல்ல
சேர்த்து சேர்த்து
தேன்ச்சுவைச் சொட்டச் சொட்ட
தமிழே தமிழை கண்டு வியக்கும் அளவுக்கு
இலக்கியங்கள் படைத்த
இணையற்ற படைப்பாளர் உமக்கு
என் தமிழ்ச்சமுதாயமே தலை வணங்கும் !!!

எழுதியவர் : சக்தி பவானி. கி.சு (15-Sep-18, 9:19 pm)
சேர்த்தது : SAKTHI
பார்வை : 63

மேலே