திருநங்கை

திருநங்கை ?

பிறவி
குற்றம்
நானறியேன்
படைத்தவன்
தவறோ
யாரறிவார்...

வாழும் உலகம்
தானறியும்
இருந்தும்
வருந்தும் நிலையில்
நாங்கள் எல்லாம் ...

பிரம்மன் உளி
செய்த தவறுக்கு
வலி ஏந்தும்
ஜீவன் ஆனோம் ...

உருவம் சரியாக தான்
செதுக்கினான் போல
இருந்தும்
பாவத்தை இடம்
மாற்றியது ஏனோ
அவனும்
மது களிப்பில்
இருந்திருப்பானோ ?

கடவுளின்
விளையாட்டில்
நாங்கள் எல்லாம்
பொம்மைகள் ஆனோம்....

அங்கத்தில்
குறை இருந்தால் கூட
சமூகத்தில்
நல்ல நிலையில்
இருந்திருப்போம்
இங்கே
அங்கமே குறையானதே...

அர்த்தநாரி
அவதாரம் கூட
மண்ணில் இருந்திருந்தால்
எள்ளி நகையாடும்
போல ...

நல்லவேளை
சந்ததி உருவாக
வழிவகை இல்லை
இல்லையேல்
அவர்களும்
எங்களை போல ?

எங்களுக்கும்
உயிர் உள்ள மனசு
இருக்கு
புரிந்து நடந்தால்
நாங்களும் நிம்மதியாக...

எழுதியவர் : த பசுபதி (16-Sep-18, 8:01 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : thirunangai
பார்வை : 53

மேலே