காலத்தின் கட்டாயம்
இது காலத்தின் கட்டாயம்
இதுவென்று சொல்வதோ
இல்லை அதுவென்று சொல்வதோ
மாறும் மாறும் என்று
நின்றது தான் மிச்சமோ
சொல்ல தான் என்ன உண்டோ
சொல்லித்தான் என்ன உண்டோ
காலம் கூறும் பதில் என்று
நின்றது தவறோ ?
செவிகள் கூட சொல்வதை கேட்கவில்லை
மனமும் கூட வேண்டாமென்று மறுக்கின்றதே
சொல்வதா இல்லை செய்வதா
புரியவில்லை விழிக்கும் நிலை இன்னும் வரவில்லை
எழவும் வழியில்லை
எழுந்தாலும் முட்டுக்கட்டையாய்
பல தடங்கள்
நாளையை சிந்தித்தேன்
இன்றை மறந்து
நேற்றை நினைத்தேன்
இந்நொடியை மறந்து
போதும் இனிமேல்
காலத்தின் மீது கொண்ட பலி போதும்
சிந்திப்பேன் பொறுமை காப்பேன்
இன்றைய நாளிலே !!