அரசியல் என்கிற அதர்மம்
அந்த கிருஷ்ணனுக்கு சேதி அனுப்புங்க.
உங்க இயேசுவின் காதுகளைக் கொஞ்சம் துடைத்து வையுங்க.
நீங்க அல்லாவை பார்த்தால் கூட்டி வாருங்க.
அன்பிருந்தால் வரச் சொல்லுங்க.
அந்த புத்தருக்கும் தகவல் சொல்லுங்க.
அகிலமெங்கும் அலைந்து திரியுங்க.
நம்மை படைத்த அந்தக் கிழவன் யாரென அறிந்து கூட்டி வாருங்க.
சிலையொன்றை செய்தான் சிறு மனிதன்.
அதை வணங்கி கடலிலே ஆற்றிலே குளத்திலே கரைப்பதை வழக்கம் என்றான் இந்து.
சிலையே கடவுளென்றால் சிலை கரைந்தும் கடவுளும் கரைந்திருப்பாரே,
என்ன சொல்லுறது?
இது கடவுள் தலைமையிலான உலக அரசியல்.
மறுப்பதும் வெறுப்பதும் உன் விருப்பமாகலாம் என்றாலும் கொடுப்பது யாரென்றால் இயற்கை.
மூடநம்பிக்கையே நிறைந்த பகுத்தறிவாதிகளை என்ன சொல்ல?
சுயமாக யோசித்து அறிந்து எதையும் அவர்கள் அறியவில்லை.
மேய்ப்பனை தலைவனென்று கால் பிடிக்கிறார்கள்.
மேய்ப்பன் அவர்களை பலியிட நேரம் பார்த்து காத்திருக்கிறான்.
திருட்டுத்தனம் நிறைந்த அரசியல் நமக்கெதுக்கு?
நாம் வாழ்வதற்காகவே வந்தோம் என்று நினைத்து நம் வாழ்வை வாழ்ந்தால் அங்கே வந்து குறுக்கே நிற்கிறது அந்த அரசியல்.
பிரிவினைகளை உயிரோட்டமாக்கி அதிலேயே பலனடைகிறது அரசியல் என்கிற அதர்மம்...