வாழ்க்கை
வாழ்க்கை என்பது என்ன அதை நாம் எப்படி வாழ வேண்டும் என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் உண்டு வாழ்க்கைக்கான அர்த்தம் என்னவென்று வாழ்க்கை என்னும் வார்த்தையிலே உள்ளது என்பதை நாம் என்றாவது உணர்ந்துள்ளோமா அதை உணர்த்தவே இக்கவிதை சமர்ப்பணம்
வாழ்க்கை
வா - ஒரு மனிதன் பூமிக்கு வந்தவுடன் இந்தபுவி அவனை "வா" என
அழைக்கின்றது.
வாழ் - வந்துவிட்டேன் இந்தபுவியில் நான் என்ன செய்யவேண்டும் என்று
மனிதன் கேட்க., அதற்க்கு இப்புவி "வாழ்" என்றது.
கை - வாழ வேண்டுமா அது எப்படி என்று மனிதன் புவியிடம் கேட்க.,
அதற்க்கு புவி சொன்னது உனது இரு "கை" களை நம்பி உழைத்து
நேர்மையாக,உண்மையாக,நம்பிக்கையை இழக்காமல்
இவ்வுலகத்தில் போராடி வாழ் என்றது புவி.
வாகை - நீ கூறியபடி நான் வாழ்ந்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று
மனிதன் கேட்க., அதற்க்கு புவி சொன்னது நான் கூறியபடி
இவ்வுலகத்தில் வாழ்ந்தால் நீ "வாகை" சூட வாழ்வாய் என்றது
புவி........