சிறப்பு தரிசனம்

சிறப்பு தரிசனம்

கண்கள் மூடினேன்!
கரங்கள் குவித்தேன்!

சிந்தை நிலைக்கவில்லை!
மனம் ஒருமுகப்படவில்லை!

முன் நிற்பவர்களை
பின் தள்ளி செய்யும்
சிறப்பு தரிசனங்களில்

இறைஉணர்வை பின்தள்ளி
முன் வந்து நிற்கிறது
இனம் புரியா குற்ற உணர்வு!

எழுதியவர் : Usharani (19-Sep-18, 9:36 pm)
Tanglish : sirappu tharisanam
பார்வை : 83

மேலே