மெய்க்காட்சி-------------------படித்த பாலுணர்வுக்கவிதை------------2014

கண்கள் என்று ஏன் பெயர்?
தொட்டுச் சிலிர்க்க வைப்பதனாலா?
குத்தும் கூர்மையினாலா?
நாணிப் புதைந்துகொள்வதனாலா?

என் நாவின்
உரையாடலில்
சிலிர்த்து
விழித்தெழுவதனாலா?

உணர்வுகளின் தழலில்
சுட்ட செம்புபோல்
சிவந்து ஒளிர்வதனாலா?

என் இனிய
அதிகாலைத் துயிலில்
மெதுவாகத் தொட்டு
வருடிச் செல்வதனாலா?

என் துயரில்
அமுதூட்டுவதனாலா?

அவை
யான்நோக்காக்கால்
நிலம் நோக்கும்
நோக்குங்கால்
தான் நோக்கி
மெல்ல நகும்.

எழுதியவர் : (20-Sep-18, 5:46 am)
பார்வை : 36

மேலே