என்னவளே

இஷ்டமான
பாடல்கள் யாவும்
இரைச்சலாகி போகிறது
உன் குரல் கேட்கா
செவிகளுக்கு.......
ஒளித்திரையில்
முகம் தேடி அலைகிறேன்
என் கண்கள் பிழையோ
உன் கைபேசி பிழையோ
அலைக்கற்றை அறுபட்டது
எதனால் அன்பே
தொலைவானதாலோ
துடராயதனாலோ
ஆனாலும் நீ
இருளை கடக்க வேண்டிய - என்
வாழ்க்கை எனும் பயணத்தில்
இடையிடையே கடந்து செல்லும்
மின்மினியாய் ஒளி தந்து
இறுதிவரை கூட வருவாய் என
எதிர்பார்ப்பில் நகரும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு யுகமாக நின்று
குதூகலிக்கிறது
என் மனதில்........

என் உயிரானவளே உனக்காக.....
என்றும் அன்புடன்
.....தயா....✍

எழுதியவர் : உலையூர் தயா (20-Sep-18, 1:46 pm)
சேர்த்தது : தயாளன்
Tanglish : ennavale
பார்வை : 726

மேலே