வலி

சற்று பலமாகக் காற்றடித்தாலும்
திசைமாறிப் போகலாமென்ற
உண்மையின் வண்ணங்களை
சிறகுகளில் தடவிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சிகளுக்குத்தான் தெரியும்
பறத்தலின் வலி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Sep-18, 2:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vali
பார்வை : 102

மேலே