காதல்

வசந்தகால புது மழைத்தூறலில் நனைந்தேன்
அது தாங்கி வந்த மண்வாடை முகர்ந்தேன் -இன்புற்று
மனம் குளிர என்னை மறந்து நிற்கையில்
பெண்ணே உனைக்கண்டேன் உந்தன்
நீண்ட மலர்விழிகள் கண்டேன் அதில்
காதல் தூறல் பொழிவதைக் கண்டேன்
அந்த பார்வை என்மீது வந்து வீச மீண்டும்
நனைந்தேனடி மீண்டும் உந்தன் காதல் விழிதூறலில்
இப்போது உந்தன் இளமையின் வாசம் நுகர்ந்து
அதில் புது வசந்தம் ஒன்று கண்டு
மழையில் நனையும் சிறுபிள்ளைபோல்
உந்தன் விழிச்சாரலை விட்டு வெளிவர மனமிலாது..........

பெண்ணே, நீயோ அந்த மழைத்தரும் மேகம்போல்
உன் விழித்தூரலில் நனைத்தாய்காதல் தந்து
ஆனால், மீண்டும் பார்க்கையிலே காணாமல் போனதேனோ
அந்த மேகம் போல் .............

மழை நீர் அருந்த காத்திருக்கும் கொண்டைக்குயில் போல்
உனைக்கான துடிக்குதடி என் நெஞ்சம் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-18, 6:29 am)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே