இவள் உன் இல்லாள்

உன் விலா எலும்பில்
மொட்டவிழ்ந்து,
உன் உயிர்க்கூட்டில்
வியாபித்தவள்....
உயிர் கொண்டு
உயில் எழுதி
உனக்கென்றானவள்...

உன்னுயிர் கண்டு,
கருக்கொண்டு,
உன்னுயிருக்கு
உருவம் தருபவள்....

காதலாகிக்
காதல் தேடி-உன்
காலடியில்
காகிதமாய்க்
கிடப்பவள்....
கலப்படமற்ற அன்பை
கண்ணியமாய்த் தருபவள்...

உன் உறவுகளுக்காய்
ஓயாமல்
உழைப்பவள்...
உன் பிணிகண்டு
ஊணுறக்கமின்றித் தவிப்பவள்...

கட்டுக்கடங்காக்காதலை
விட்டுக்கொடுக்காமல்
வீசுபவள்....
உன் ஆளுமைக்குள்
பெட்டிப்பாம்பென
அடங்கியவள்...

இவள் உன் இல்லாள்....

எழுதியவர் : Jaleela Muzammil (21-Sep-18, 11:22 pm)
சேர்த்தது : Jaleela
பார்வை : 207

மேலே