தனிமை

மனது சொல்ல மறுக்கிறது
உன்னை பற்றி
அறிவு ஆயிரம் நினைக்கிறது
உன்னை பற்றி
விழிகள் வினா எழுப்புகின்றன
என்னை சுற்றி
சிந்தனைகள் சிதறிப்போய் விட்டன
என்னை சுற்றி
மணித்துளிகள் மெதுவாக மாறுகின்றன
கடிகாரத்தை சுற்றி
மொழிகள் மௌனமாயின
என்னை சுற்றி
எனவே என் பேனா பேசுகின்றது
உன்னை பற்றி
விரல்கள் விரைந்து ஓடுகின்றன
உன்னை வடிக்க
வடித்துவிட்டு பார்க்கிறேன்
என்னை சுற்றி
நீ !!!!
மேலும் உன் நினைவாக
இந்த கிறுக்கல்
மனதோடு ஒரு சிறய பெருமிதம் !!!

எழுதியவர் : சு. வினோத் (23-Sep-18, 2:14 am)
சேர்த்தது : Vinothedal
Tanglish : thanimai
பார்வை : 226

மேலே